யாழில் இதுவரை 22 வீத வாக்குகள் பதிவு!

நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி வரை 22.05 வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுராட்சி சபைகளில் நடைபெற்று வரும் இந்த வாக்களிப்பில் மக்கள் ஆர்வமாக தமது வாக்குகளைப் பதிவுசெய்துவருகின்றனர்.

அந்தவகையில் வலி.மேற்குப்பிரதேச சபையில் மக்கள் தமது வாக்ககுளை அதிகமான பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில், வலி.மேற்குப் பிரதேச சபையில் 29.93 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts