யாழில் ஆவா குழுவை சேர்ந்த நால்வர் கைது!!

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சந்துகநபர்கள் பயணித்த காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள, நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, முத்து என்பர் காரில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவர்களின் காரை பின் தொடர்ந்து பரமேஸ்வர சந்திக்கு அருகில் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது காருக்குள் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் வாள் ஒன்றையும் மீட்ட பொலிஸார், சந்தேகநபர் நால்வரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts