யாழில் ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்!

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் மக்கள் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் வாக்களித்துவருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதன்படி யாழ்மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் காலை ஏழு மணியில் இருந்து வயோதிபர்கள், இளைஞர்கள் யுவதிகள், என பல்வேறு தரப்பினர் தமது வாக்குகளை பதிவுசெய்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, வாக்குச் சாவடியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts