யாழில் ஆயுதமுனையிலும் கொள்ளை

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 11 இலட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் 8 திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts