ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(10-10-2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ், மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர் மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால், தமிழினத்தின் அபிலாஷைகளையும் அவலங்களையும் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.