யாழில் அதிகளவானோர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர்: யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி

கிளிநொச்சியை அடுத்து யாழில் இருந்தும் பெரும் தொகையானவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்று கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று அளவெட்டியில் நடைபெற்றது.

அளவெட்டி மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயணாளிகளுக்கான வீடுகளைக் கையளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

ஆராம்ப காலத்தில் இராணுவத்தில் பெருமளவான தமிழர்கள் பணிபுரிந்து வந்தனர். அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் இராணுவத்தில் இருந்து விலகிக் கொண்டனர்.

தற்போது மீண்டும் தமிழர்கள் இராணுவத்தில் இணைந்து கொள்கின்றனர். இதனால் தனி சிங்கள இராணுவம் என்று இல்லாமல் இலங்கை இராணுவம் என்ற பதம் உருவாகக் கூடும்.

யாழ் மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் இராணுவம் தொடர்பான வதந்திகளைப் பரப்பிக் கொண்டு தமது அரசியலை நடத்துபவர்களே அதிகமாக உள்ளனர்.

அவர்களைப் பார்த்து நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். இராணுவத்தினால் இன்றுடன் ஆயிரத்து 780 ஆவது வீடு கட்டிக் கொடுக்கப்படுகின்றது.

அதே இராணுவம் தொடர்பான வதந்திகளைப் பரப்பும் நீங்கள் ஒரு வீடேனும் கட்டிக் கொடுக்க முடியுமா என்று? அவ்வாறு கட்டிக் கொடுக்காமல் இராணுவத்தைப் பற்றி கதைக்க எந்த அறுகதையும் உங்களுக்கு இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts