யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்

meeting_jaffna_police_jeffreeyயாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி அவர்கள் தெரிவித்துள்ள குற்றச்செயல்கள்.

யாழ்ப்பாணத்துக்கு கஞ்சா கடத்திய இந்தியர் உட்பட6 பேர் கைது

இந்தியக் கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்துக்கு அதிவிசேட போதைப் பொருள் அடங்கிய கஞ்சாவைக் கடத்திய நான்கு இந்தியர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் உற்பத்தியாகும் 101 கிலோ 850 கிராம் கஞ்சாவை கடல் வழியாக யாழ்.குடாநாட்டிற்குள் விற்பனைக்காக கடத்திய இந்தியர்கள் மற்றும் யாழ்.வேலணையைச் சேர்ந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்த கஞ்சா இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்வர்கள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்.சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்

3 கோடி 80 இலட்சம் ரூபா காசோலை மோசடி! ஜவர் கைது

யாழ்.மாவட்டத்தில் 3 கோடி 80 இலட்சம் ரூபாய் காசோலை மோசடி கடந்த வாரம் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டுப் பதிவு குறிப்பிடுவதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.

யாழில் நடைபெற்றுவரும் காசோலை மோசடி தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், யாழ்.பரமேஸ்வரா சந்தியில் உள்ள கடை ஒன்றில் 49 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.கஸ்தூரியார் வீதியிலுள்ள கடை ஒன்றில் 5 இலட்சம்,

யாழ்.நகரப் பகுதியில் 2 இலட்சம்,

நல்லூரில் 3 இலட்சம்,

மானிப்பாய் வடக்கு பகுதியில் 3 இலட்சம் ரூபா,

சாவகச்சேரி நகரப் பகுதியில் 3 இலட்சம் காசோலை மோசடி நடைபெற்றுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி கூறினார்.

யாழில் வர்த்தகத் துறையினரே இந்த காசோலை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் காசோலை மோசடி தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் 5 வயது சிறுதியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 59 வயது நபர் கைது

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டப்பிராயில் 5 வயதுச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 59 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த 5 வயதுச் சிறுமியை பற்றை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சிறுமி வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விநாயகர் வீதி கொக்குவிலைச் சேர்ந்த 59 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மே 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும்,

யாழில் 14 வயது சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுச் சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில் ,

கணவன் மனைவிபோல் 7 மாதங்களாக குடும்பம் நடத்திய 24 வயது இளைஞன் குறித்த சிறுமியை பாலியல் தேவைக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் குறித்த சிறுமி 14 வயதும் 6 மாதங்களையும் கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இளவாலை மார்சன்கூடல் பகுதியைச் சேர்ந்த இளைஞன் குறித்த சிறுமதியை பாலியல் தேவைக்காக குடும்பமாக இருந்து வந்துள்ளதாகவும் குறித்த சிறுமியின் பொற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து குடும்பம் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் எதிர்வரும் மே 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுகுற்றம் புரிந்த 165 பேர் கைது

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேரும், அடித்து துன்புறுத்தியவர்கள் 27, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 18 பேர், குடிபோதையில் கலகம் விளைவித்தவர் 01, மதுபோதையில் வாகனம் செலுத்திய 02, திருடிய குற்றச்சாட்டில் 08, பொது இடத்தில் மது அருந்திய 02, பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த 01, சூழல் மாசடைதல் 04, வீதி விபத்து 03, பொது இடத்தில் கலகம் விளைவித்த 14, பணமோசடி 04, கஞ்சா 06, ஏனைய குற்றங்களுக்காக 53 பேருமாக மொத்தம் 165 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

8 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் கடந்தவாரம் திருட்டு

கடந்த வாரம் புத்தூர் வடக்கில் வீடு உடைத்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தாலிக் கொடி திருடப்பட்டுள்ளது. அச்சுவேலியில் 2 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

கொக்குவில் வீட்டின் முன்புறம் இருந்த 20 ஆயிரம் ரூபா பெறுமதியான இரும்புக் கதவு திருடப்பட்டுள்ளது. அத்துடன் 18 ஆயிரம் ரூபா பெறுமதியான உடைமைகள் சேதப்படுத்தி நஷ்ட மேற்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டுப் பொருள்களும் மீட்கப்பட்டன.

குருநகரில் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. யாழ். நகரில் தையல் கடை ஒன்றை உடைத்து 8 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாயில் பட்டப்பகலில் வீடு உடைத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான சங்கிலி மற்றும் பெறுமதி மிக்க கைத்தொலைபேசி என்பன திருடப்பட்டுள்ளன. சுன்னாகம் சூராவத்தையில் 12 ஆயிரத்து 300 ரூபா பெறுமதியான சைக்கிள் திருடப்பட்டுள்ளது. சந்தேக நபர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சைக்கிளும் மீட்கப்பட்டது.

கொடிகாமம் தோப்பை வேலி மேற்கிலுள்ள பிள்ளையார் கோயில் ஒன்றிலிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பித்தளையிலான பிள்ளையார் விக்கிரகம் திருடப்பட்டுள்ளது.

கொடிகாமம் வடக்கில் கோயில் ஒன்றில் 6 ஆயிரத்து 500 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில் கடை உடைத்து 24 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி திருடப்பட்டுள்ளது.

Related Posts