யாழிலுள்ள மாகாண வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு: தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்கும் நோயாளர்கள்!

வடமாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் இல்லாத மருந்துகளை, தனியார் மருந்தகங்களில் வாங்கிக் கொண்டு சிகிச்சைக்கு வருமாறு வைத்தியர்கள் அறிவுறுத்திய சம்பவங்கள் யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் அவதானிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக காயத்திற்கு இடும் திரவ மருந்துகள், கட்டுப் போடும் துணி, பண்டேஜ் என்பனவற்றிற்கு யாழ் மாவட்டத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு சிகிச்சைக்கு சென்ற பலர், தனியார் கிளினிக்கில் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அறுவுறுத்தப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.

இந்த பொருட்கள் தமது கையிருப்பில் இல்லை யாழ் மாவட்டத்திற்கான மருந்து விநியோக பிரிவும் கையை விரித்துள்ளது.

மருந்து பொருட்களை முறையாக களஞ்சியப்படுத்தி வைக்காமல் விட்ட அதிகாரிகளின் கவலையீனமே, மருந்து பொருள் தட்டுப்பாட்டிற்கு காரணம் என கூறப்படுகிறது.

மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போது வடக்கில் முகாமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts