யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றுக்கு எதிராக யாழ் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

jaffna-muslimயாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டமான செய்தியொன்று பிரசுரமானது குறித்து யாழ், முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் முஸ்லிம் பிரதேசத்தில் அண்மையில் கிணறு ஒன்றுக்குள்ளிருந்து சில வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலத்தின் அண்மையில் இராணுவ முகாம் ஒன்று அமைந்திருப்பதுடன், கண்டெடுக்கப்பட்டிருந்த வெடிபொருட்களும் வருடக்கணக்கில் துருப்பிடித்த, பாவனைக்குதவாத வெடிபொருட்களாகும்.

எனினும் இந்த வெடிபொருட்களை கிழக்கு முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் கடத்தி வந்ததாகவும், வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு இவை எடுத்து வரப்பட்டதாகவும் குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இதனைக் கண்டிக்கும் வகையில் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின் பின் ஒன்று கூடிய முஸ்லிம்கள் ஊர்வலமாக இப்பத்திரிகைக்கெதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் நான்கு சந்தியில் வைத்து குறித்த பத்திரிகை பிரதிகளை எரித்தனர்.

Related Posts