யாழிலிருந்து தமிழ்நாட்டிற்கு நேரடி கப்பல் போக்குவரத்து! : பிரதமர் அறிவிப்பு!!

யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாரிலிருந்து தமிழகம் – இராமேஸ்வரத்துக்கு நேரடி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் தனியார் பேருந்து வளாகத்தில் இன்று இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் நகரின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றன. மன்னார் மாவட்ட விவசாயக் குளங்களைச் சீரமைத்து விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தவம் திட்டமிட்டுள்ளது.

மன்னார் பிரதேசத்தின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை என்பனவற்றை மேம்படுத்துவது பற்றி அரசு கவனம் செலுத்தியுள்ளது” என்று பிரதமர் மேலும் கூறினார்.

Related Posts