Ad Widget

யாழிற்கு ரயில் சேவையின் ஊடான தபால் சேவை விரைவில்

யாழிற்கு விரைவில் ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்படுவதைத் தொடர்ந்து ரயில் சேவையின் ஊடான தாபல் சேவையும் ஆரம்பித்து வைக்கப்படும் என தபால் திணைக்களத்தின் பிரதி தபால்மா அதிபர் ரோஹன அபேயரத்ன தெரிவித்தார்.

???????????????????????????????

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு சகல மாகணங்களைச் சேர்ந்த தபால் திணைக்கள உத்தியோகத்தர்களை ஒன்றினைத்து அஞ்சல் தின நிகழ்வு இன்று யாழ்.பிரதம தபாலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகணத்தில் தபால் சேவையின் பரிமானத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.

தபால் திணைக்களமானது தனது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் புதிய பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சேவைகள் அனைத்தும் மக்களுக்க பயன் தரக்கூடிய விதத்தில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 27 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையின் ஊடான தபால் சேவையையும் தபால் திணைக்களம் ஆரம்பித்து வைக்கவுள்ளது.

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வகையில் ரயில் சேவையானது ஆரம்பித்த வைக்கப்படுவதைப் போன்று தபால் சேவையையும் இலகுபடுத்தும் முகமாக எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் தபால் ரயில் சேவையும் இடம்பெறும்.

நாட்டில் உள்ள சகல மக்களையும் இணைக்கும் வகையில் எமது தபால் சேவைகள் விஸ்தரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Posts