யார் அந்த 4 அமைச்சர்கள்.அடுத்த சில தினங்களில்!

அமையவுள்ள வடமாகாணசபை அரசில் முதலமைச்சரால் 4 அமைச்சர்கள் வெற்றிபெற்ற உறுப்பினர்களில் இருந்து நியமிக்கப்படுவர்.அந்த நான்கு அமைச்சர்களும் யார் என இப்போதே ஆதரவாளர்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.அவற்றுக்கு பொருத்தமானவர்களை நியமிக்கவே்ணடிய தேவை கூட்டமைப்பினருக்கு இருக்கிறது. அவர்கள் முதலமைச்சருடன் ஒத்துழைக்கக் கூடிவர்களாகவும் துறைசார்ந்த விற்பன்னர்களாகவும் இருக்கவேண்டியது அவசியமாகின்றது.அதேவேளை கூட்டமைப்பில் உள்ள கட்சிகளையும் சமாதானப்படுத்தவேண்டியும் இருக்கும்

இது தொடர்பில் முதலே கருத்தொற்றுமை மற்றும் உடன்பாடுகள் தேர்தலுக்கு முன்பாக ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பபடுகின்றது எனவே அமைச்சரவை தெரிவுகள் விருப்பு வாக்கின் அடிப்படையில் இருக்காது என்றே நம்பப்படுகின்றது.அதனை கூட்டமைப்பின் தலைமை முதலமைச்சருடன் இணைந்து தெரிவுசெய்யும் என கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி – சிவஞானம், உட்கட்டுமானம் – சர்வேஸ்வரன், கல்வி- குருகுலராஜா,விவசாயம்- ஐங்கரநேசன் என சில முன்மோழிவுகள் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.சுகாதார அமைச்சு ஒன்று அமையுமாயின் அது வைத்தியர் ஒருவருக்கு மிக பொருத்தமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது இருப்பினும் 4 அமைச்சுக்களே உருவாக்கமுடியும் அது எப்படி அமையபோகிறது அதில் யார் யார் அமைச்சர்கள் என்பதை முதலமைச்சரே முடிவுசெய்வார்.ஏனெனில் அவரே ஆட்சியை கொண்டு செல்லப்போகின்றவர்.

எது எப்படியோ இன்னும் ஒரு உ்ள்வீட்டு சண்டையினை இந்த தெரிவு முயற்சிகள் ஏற்படுத்திவிடக்கூடாது என தமிழ்த்தேசிய அரசியல் அவதானிகள் விரும்புகின்றனர்.

இதுவரைகாலமும் வடமாகாணசபையின் அமைச்சுக்கள் யாவும் ஆளுனரின் கீழ் இருந்த நிலையில் முன்னர் ஆளுனரின் அலுவலகம் நோக்கி சென்று வந்த அதிகாரிகளின் வாகனங்கள் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆளுனர் மாற்றப்பட வேண்டும் எனஅமைச்சர் வாசுதேவ நாணயக்கார கேட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தமது பதவிகளுக்கு பங்கம் விளைந்துவிடக்கூடாது என்பதற்காவும் தமது விசுவாசத்தினை காட்டுவதற்காகவும் இந்த விஜயங்கள் இருக்கலாம் என அவதானிகள் கூறுகின்றனர்.

அதேவேளை முதலமைச்சர் பல்கலைக்கழக சமூகத்ததுடனான சந்திப்பு ஒன்றில் தான் பதவிக்கு வந்ததும் எந்தவகையிலும் அதிகாரிகளை பழிவாங்கப்போவதில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 8 உறுப்பினர்களைக்கொண்ட எதிரக்கட்சி அணியில் இலங்கை சுதந்திரக்கட்சியின் சார்பிலான யாழ்மாவட்ட உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்படலாம் என் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான பகுதியில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி

Related Posts