எவரும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் எனவும், எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் சட்டத்தை மதித்து செயற்படுமாறும் ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இன்று மாலை இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம் செய்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.