யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் புத்தளம், கண்டி, யாழ். மாவட்டங்களில் உள்ளவர்கள் இக்காலப்பகுதியில் பழகியவர்கள் தொடர்பில் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஏதேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவியுங்கள்.
நீங்கள் உண்மையான தகவல்களை வழங்கும் போது உங்களையும் உங்களை சுற்றி இருப்போரையும் காப்பாற்ற இலகுவாக இருக்கும். தயவு செய்து உண்மைகளை மறைக்காதீர்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.