யான் டிரைலரை பார்த்து வியந்த அமிதாப் பச்சன்

வா-துளசி நாயர் நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் ‘யான்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வருகிறார். நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

yaan1

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படமாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 2-ந் தேதி வெளியாகவிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் ரவி.கே.சந்திரன் போட்டுக் காண்பித்துள்ளார். டிரைலரை பார்த்த அமிதாப்பச்சன் யான் படத்தை வெகுவாக புகழ்ந்தார்.

அவர் பேசும்போது, ரவி கே.சந்திரன் என்னுடைய நீண்டநாள் நண்பர். மிகவும் திறமையானவர். என்னுடன் நிறைய படங்களில் நிறைய பணியாற்றியவர். குறிப்பாக, நான் நடித்த ‘பிளாக்’ என்ற படத்தின் ஒளிப்பதிவாளராக மிகவும் திறமையாக பணியாற்றியவர்.

எனக்கு நெருங்கிய நண்பரான ரவி கே.சந்திரன் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகும் ‘யான்’ படத்தின் டிரைலரை எனக்கு போட்டு காண்பித்தார். அந்த டிரைலர் மிகவும் நன்றாக இருந்தது. டிரைலரை பார்க்கும்போதே இளமையான ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என தெரிகிறது. படம் பெரிய வெற்றிபெற ரவி.கே.சந்திரனுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.

Related Posts