யானை சவாரி மற்றும் மாட்டு வண்டி சவாரிக்குத் தடை

இம் முறை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் யானை சவாரி மற்றும் மாட்டு வண்டி சவாரிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மிருகங்களை வதைக்கும் ஒரு விளையாட்டாக இதைக் கருதுவதால் இதனை தடை செய்யக்கோரி பொலிஸ் நிலையங்களில் சுற்றரிக்கை வெளியிடப்பட்டமைக்கு அமைவாக குறித்த விளையாட்டினை தடை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தடையினை மீறி மிருகங்களைக் கொண்டு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிருக வதையை தடுப்போம் என்ற கருப்பொருளின் கீழ் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts