யானைகளின் தொல்லை அதிகம் மக்கள் அவதி

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டார்மலை, பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லையினை கிராமங்களின் மக்கள் எதிர்கொண்டுள்ளனா்

கடந்த மூன்றாண்டுகளாக குறித்த பகுதிகளில் யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதென முடிவு எடுக்கப்பட்ட போதிலும் 2019ம் ஆண்டில்தான் மின்சார வேலி அமைக்கப்படும் என அதிகாரிகளினால் தெரிவிக்கப்படும் நிலையில் ஆயிரம் குடும்பங்கள் வரை நாள்தோறும் யானைகளின் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

பயன்தரு தென்னை பலா மா மரங்கள் உட்பட அனைத்து மரங்களையும் யானைகள் மாலை 4.00 மணியளவில் கிராமங்களுக்குள் புகுந்து அழித்து வருகின்றன.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் யானைகளின் தொல்லை தொடர்பாக பொது மக்களினால் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் யானைகளின் நடமாட்டம் காரணமாக மாலை 4.00 மணியுடன் மக்கள் பயணிப்பதில் அச்சங் கொண்டு உள்ளனர்.

மேழிவனம், கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு, அம்பகாமம் ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லை காணப்படுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொது மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts