யானைகளின் அட்டகாசத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மக்கள், பாதிப்பை தவிர்க்க பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு கோரியுள்ளனர்.
முல்லைத்தீவில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்து வருகின்றது.
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் யானைகள், வயல் நிலங்களை சேதப்படுத்துவதால், மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், முல்லைத்தீவின், பழம்பாசி, ஓதியமலை, தண்டுவான் ஆகிய பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.