அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களான ஜெரி யங், டேவிட் பிலோ ஆகியோர் கூட்டாக இணைந்து 1994ல் யாகூ நிறுவனத்தை உருவாக்கினர்.
இன்டர்நெட்டில் வலைதள நிறுவனங்களின் முகவரிகளை தேடித் தரும் முன்னோடி தேடல் பொறி என்ற சிறப்பு யாகூ வலைதளத்திற்கு உள்ளது. இந்த நிலையில் ‘யாகூ’ வலைதள நிறுவனத்தை தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 483 கோடி டாலருக்கு வாங்குகிறது.
கடந்த சில மாதங்களாக வெரிசான் மற்றும் யாகூ நிறுவனங்களுக்கு இடையே ரகசிய பேச்சு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று யாகூ நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளதாக வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. யாகூ நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதலுக்கு பின் 2017 மார்ச் மாதத்திற்குள் யாகூ வெரிசான் நிறுவனத்தின் ஓர் அங்கமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.