யதார்த்தங்களை கணக்கிலெடுத்து இலட்சியங்கள் அமைந்தால் பாதிப்புக்கள் குறையும்!- சீ.வி.விக்னேஸ்வரன்

வடமாகாண கல்வியமைச்சின் அனுசரணையுடன் யாழ்.தென்மராட்சி வலயக் கல்வித் திணைக்களம் நடத்திய “மார்கழி திங்கள்” முழுநிலா கலை நாள் நிகழ்வு சாவகச்சேரியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

12

சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

முன்னதாக சாவகச்சேரி நகரிலிருந்து தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ஊர்திகளும், நடன நிகழ்வுகளும் ஊர்வலமாக வந்தன. இதன் பின்னர் விருந்தினர்கள்
அழைத்து வரப்பட்டனர்.

இதன் பின்னர் கலாசார மண்டபத்தில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று மாலை 2மணிவரை நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், மற்றும் அரியரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தமிழறிஞர் மறவன்புலோ சச்சிதானந்தத்திற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதேபோன்று நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை வெளிக்கொணரும், மிக உன்னதமான நிகழ்வாக மேற்படி நிகழ்வு அமைந்திருந்ததாக விருந்தினர்கள் சபையில் புகழாரம் சூட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி

Related Posts