இலங்கைக்கான ஜப்பானின் விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார்.
.
அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அகாசி கவனம் செலுத்தியதாக தெரியவந்துள்ளது.
ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே இன்றைய தினம் இலங்கை வருவிருக்கும் நிலையில் அந்த விஜயத்திற்கு முன்னோடியாக இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
ஜப்பானின் தலைவர் ஒருவர் 24 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போது, இலங்கை வருமாறு அந்த நாட்டு பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் இலங்கை விஜயம் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ஜப்பானுக்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இச்சந்திப்பின்போது அகாஷி தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஆகியோர் உட்பட ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.