கமல் மௌலி இணையும் பரமபதம்!

ஹேராம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து வந்தாலும், கமல் அடிப்படையில் காமெடி விரும்பி. இதை அவரே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அதனால்தான் சீரியஸான படங்களில் நடித்தாலும் அவ்வப்போது காமெடி படங்களிலும் நடித்து வருகிறார்.

kamal-moley

கமல் நடித்த காமெடிப் படங்களில் பல படங்கள் கடந்த காலங்களில் வெற்றியும் அடைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று பம்மல் கே சம்மந்தம். 2002 ஆம் ஆண்டு கமல், சிம்ரன், அப்பாஸ், சினேகா ஆகியோர் நடிப்பில், வெளிவந்த ‘பம்மல் கே சம்பந்தம்’ படத்தை மௌலி இயக்கினார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ படத்தையும் மௌலி இயக்கினார். நள தமயந்தி படத்திற்குப் பிறகு என்ன காரணத்தினாலோ படங்கள் இயக்குவதை மறந்து சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார் மௌலி.

இந்நிலையில், தற்போது கமலுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

கமல் மௌலி இணைந்தால் காவியமா எடுப்பார்கள்? இந்தப்படமும் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்தே உருவாகவிருக்கிறதாம். இந்தப் படத்திற்கு ‘பரமபதம்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல்.

Related Posts