‘மோறா’ சூறாவளியால் இலங்கை பாதிப்பு இல்லை: வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடாவின் கிழக்கு திசையில் நிலை கொண்டிருந்த ‘மோறா’ சூறாவளி இன்று (செவ்வாய்க்கிழமை) பங்களாதேஷ் பகுதிக்குள் நிழையும் எனவும் இதன்காரணமான இலங்கைக்கு பதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக, மேகம் மூட்டமாக காணப்படுவதுடன், மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்றும் அதிக மழை வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் எனவும் மலையக பகுதிகளில் மணிக்கு 79 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இந்த சீரற்ற காலநிலை இரு தினங்களில் குறைந்து மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related Posts