மோட்டார் வாகனம், முச்சக்கர வண்டியின் விலை அதிகரிப்பு?

மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டியின் விலை அதிகரிக்க கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டிக்கான உற்பத்தி வரி அதிகரித்தமை காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்க கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்த வரி அதிகரித்தமைக்கு அமைய விலை கணக்கீடு செய்யும் போது வாகனத்தின் திறன் கருத்தில் கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts