மோட்டார் சைக்கிள்களின் விளக்குகளை ஒளிரவிடக் கோரிக்கை

detail_headlight-bikeதங்களது மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) இன்று முதல் பகல் வேளைகளில் ஒளிரவிட்டுச் செல்லுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மோட்டார் சைக்கிள் சாரதிகளிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனையின் நிமித்தம் பகல் வேளைகளில் மோட்டார் சைக்கிள் விளக்குகளை ஒளிரவிட்டுச் செல்லுமாறு மேல்மாகாணத்திலுள்ள மோட்டார் சைக்கிள் சாரதிகளிடம் ஏற்கெனவே கேட்கப்பட்டிருந்தது.

Related Posts