மோட்டார் சைக்கிளுக்கு ‘ஆசனப்பட்டி’ வழக்கு!

மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றபோது ஆசனப்பட்டியை “SEAT BELT” அணியாமல் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரினால் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது.

காலி, ஹவுல்பே பதுவத்தையைச் சேர்ந்த பிநீத் சிசிர குமாரவுக்கே இவ்வாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றத்துக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறே அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த நோட்டீஸின் பிரகாரம் எதிர்வரும் 30ஆம் திகதி காலை 8.30 மணிக்கு காலி மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வாகன சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய குற்றத்துக்காக தனக்கு 2500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது என்றும் அந்த தண்டத்தை மே மாதமே தான் செலுத்தி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

police-seet-bult-

Related Posts