வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதில் அவர்களிருவரும் காயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை(11) மாலை 04 மணியளவில் யாழ். கைதடி மானிப்பாய் வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். கைதடி மானிப்பாய் வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் கைதடி மேற்குப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தரொருவரும், 24 வயதுடைய இளைஞரொருவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.