மோடியின் தாயாரைக் கடத்த திட்டம்?

பிரதமர் மோடியின் தாயாரைக் கடத்தப் போவதாக பேஸ்புக்கில் வெளியான மிரட்டலைத் தொடர்ந்து குஜராத்தில் வாழும் பிரதமரின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

modi-mother

சமூகவலைதளப்பக்கமான பேஸ்புக்கில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் இன்சமாம் கத்ரி என்ற பெயரில் உள்ள பக்கத்தில், ‘பிரதமர் மோடியின் தாயாரை நாங்கள் கடத்தினால், அவர் நாங்கள் கூறும் எதனையும் செய்வார்’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் குறித்து தகவலறிந்த குஜராத் மாநில போலீசார், காந்திநகரில் தங்கி இருக்கும் பிரதமரின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்துள்ளனர்.

பேஸ்புக் மிரட்டல் தொடர்பாக மேற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அம்மாநில போலீசார் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே, பேஸ்புக்கில் வெளியான இந்தக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, உடனடியாக அப்பக்கத்தில் இருந்து அந்த கருத்து நீக்கப்பட்டது. இந்த மிரட்டல் தொடர்பாக உத்தர பிரதேச போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Related Posts