மோடியின் உலங்கு வானூர்தியால் காயமடைந்த பெண்

ஹட்டன்- நோர்வூட் விளையாட்டரங்கு அருகில் மதில்சுவர் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (12) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த உலங்கு வானூர்தி நோர்வூட் மைதானத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட அதிக காற்று காரணமாக குறித்த மதில்சுவர் உடைந்து வீழ்ந்துள்ளது.

காயமடைந்த பெண்மணி டிக்கோயா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts