மோசமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட போர் கைதிகள்! ஐ.நா பகிரங்க குற்றச்சாட்டு

ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் போர் கைதிகளை சித்திரவதை செய்ததாக ஐ.நா மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

இருதரப்பிலும் விடுவிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட போர் கைதிகளிடம் ஐ.நா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் ராணுவத்தினரை நாய்களை விட்டு கடிக்கவைத்தும், நிர்வாணப்படுத்தி உடலில் மின்சாரம் பாய்ச்சியும் ரஷ்ய வீரர்கள் சித்திரவதை செய்துள்ளது தெரியவந்தது.

அதேபோல் உக்ரைன் வீரர்களும், தங்களால் கைது செய்யப்பட்ட ரஷ்ய வீரர்களை முறையான விசாரணையின்றி கொலை செய்ததும், நிர்வாணப்படுத்தி வாகனங்களில் அழைத்துச்சென்று அடித்து துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.

Related Posts