மோசமான இரவை எதிர்கொள்ளும் புடின்! ட்ரோன் தாக்குதலினால் திணறும் ரஷ்யா!!

உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் நான்கு இராணுவ விமானங்கள் சேதமடைந்துள்ளமை ரஷ்யா எதிர்கொள்ளும் மிக மோசமான தாக்குதல் சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது.

10 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் பிஸ்கோவ் பகுதியில் உள்ள விமான தளத்தை தாக்கியதாக கூறப்படுகின்றது.

எஸ்டோனியா மற்றும் லாட்வியாவின் எல்லைக்கு அருகில் இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ட்ரோன் தாக்குதலில் நான்கு Il-76 போக்குவரத்து விமானங்களை சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஓரியோல், பிரையன்ஸ்க், ரியாசான், கலுகா மற்றும் மாஸ்கோ பகுதியில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Pskov பிராந்திய கவர்னர் Mikhail Vedernikov தாக்கப்பட்ட விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களையும் இன்று ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் மாஸ்கோவிற்கு வெளியே உள்ள மூன்று விமான நிலையங்கள் – ஷெரெமெட்டியோ, வ்னுகோவோ மற்றும் டோமோடெடோவோ ஆகியவையில் தற்காலிகமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Posts