மொஹமட் சுலைமான் கொலை :பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 7 பேர் கைது

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசித்துவந்த செல்வந்த வர்த்தகரான மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொலையை மேற்கொண்ட சந்தேகநபரையும் அதன்பின்னர் வர்த்தகரின் சடலத்தை வாடகை வாகனம் மூலம் கொழும்பில் இருந்து மாவனெல்ல, ஹெம்மாத்தகம பகுதிக்கு கொண்டு செல்ல இணங்கிய குழுவினரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆடைத்தொழில்துறையை சேர்ந்த பிரபல வர்த்தகரான மொஹமட் சுலைமான், கப்பம் கோரப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு கார் ஒன்றில் வந்த குழுவினர் குறித்த வர்த்தகரை அவரது வீட்டிற்கு அருகில் வைத்து கடத்திச் சென்றிருந்தனர்.

இதன்பின்னர் கொழும்பில் இருந்து வடகிழக்காக உள்ள மாவனெல்ல பகுதியில் இருந்து 24 ஆம் திகதி அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் ஐந்து வர்த்தகர்களுக்கு நாட்டில் இருந்து வெளியேற தடைவிதிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Related Posts