மொட்ட சிவா கெட்ட சிவா படத்தால் பின்வாங்கிய படங்கள்

நட்டி நடராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எங்கிட்ட மோதாதே’, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘புரூஸ்லீ’ ஆகிய படங்கள் வரும் மார்ச் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். கடந்த ஒருவார காலமாக இப்படம் குறிப்பிட்ட தேதியிலேயே வெளியாகும் என்று விளம்பரமும் செய்து வந்தனர்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வருகிற மார்ச் 9-ந் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் ‘எங்கிட்ட மோதாதே’, ‘புரூஸ்லீ’ படங்களின் ரிலீஸ் தேதியை தற்போது ஒத்திவைத்துள்ளனர்.

அதன்படி, ‘எங்கிட்ட மோதாதே’ படத்தை வரும் மார்ச் 24-ந் தேதிக்கும், ‘புரூஸ்லீ’ படத்தை வருகிற மார்ச் 17-ந் தேதிக்கும் ஒத்திவைத்துள்ளனர். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, அதிகபடியான திரையரங்குகள் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கே கிடைக்கும் என தெரிகிறது. எனவே, மேற்சொன்ன இரண்டு படங்களுக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கைகள் குறைவாக கிடைக்கும என்பதாலேயே தள்ளிப்போனதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இருப்பினும், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தோடு சந்திப் கிஷன், ஸ்ரீ நடிப்பில் உருவாகியிருக்கிற ‘மாநகரம்’ தைரியமாக போட்டியிட களத்தில் இறங்கியுள்ளது. மேலும், ‘நிசப்தம்’ என்றொரு படமும் மார்ச் 10-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

Related Posts