மிகப்பெரிய யுத்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளார். யுத்தத்தின் மிகுதி பகுதியை ஐக்கிய தேசிய கட்சி வெற்றிகொள்ளும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொரளை கொம்பல் மைதானத்தில் இன்று சனிக்கிழமை(11) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
‘ராஷபக்ஷ அரசை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து பெரும் யுத்த போராட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால வெற்றியை தேடி தந்துள்ளார்.
போராட்டத்தின் மிகுதி பகுதியை ஐக்கிய தேசிய கட்சி வெற்றிகொள்ளும்’ என பிரதமர் ரணில் கூறியுள்ளார்.