ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளது. என்று அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
உத்தேச தேர்தல் முறைமையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றம் தொடர்பிலான பரிந்துரைகளை அமுலாக்கம் செய்வது குறித்து இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது ஒரு வாக்குறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.