மைத்திரியை கொலை செய்ய முயன்ற மஹிந்த!: அம்பலமாகும் இரகசியங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தீட்டிய சதித்திட்டங்களை அம்பலப்படுத்த முயன்றதற்காக பல தடவைகள் என்னைக் கொலை செய்து விட முயற்சி செய்தார்கள் என ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ மேஜர் ஹசித சிரிவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

2011ஆம் ஆண்டு தற்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் நிமல் சிரிபால, ஜோன் செனவிரத்ன, சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய ராஜபக்ஷ தரப்பு திட்டம் தீட்டியது.

அப்போது நான் ஜகத் ஜகசூரிய ( முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல்) படைப்பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தேன். மேற்கூறிய கொலைத்திட்டங்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் நான் அறிவேன்.

இதன்காரணமாக என்னை கைது செய்து கொலை செய்து விடவும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற பட்டத்தினைக் கொடுக்கவும் திட்டங்களை தீட்டினார்கள். அப்போது 5 தடவைகள் என்னை கொலை செய்ய முயற்சி செய்தார்கள் ஆனால் அவற்றில் இருந்து தப்பினேன்.

கடந்தகால யுத்தம் எவ்வாறு நடந்தது, எப்படி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்ற அனைத்து தகவல்களையும் நான் அறிவேன். அதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

அதேபோன்று தற்போது, நாட்டில் மக்களை ஏமாற்றும் அரசியல் நடைபெற்று வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் ரணில் விக்ரமசிங்க இனவாதம் செய்து பலத்தை பெற்று கொள்ள முயற்சி செய்பவர்கள்.

இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திட்டம் தீட்டி மக்களை ஏமாற்றிக்கொண்டு வருகின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். யுத்தம் என்ற போர்வையில் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றவர்களும் இவர்களே எனவும் ஹசித சிரிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts