மைத்திரியிலும் திருப்தியில்லை – சுரேஸ் எம்பி!

இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் தமிழர்களின் பிரச்சனை குறித்து சாதகமான  தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதனால் இருவேட்பாளர்களிலும் நாம் திருப்தியடைந்திருக்கவில்லை  என தமிழ்தேசியக்கூட்டமைப்பு பேச்சாளர் நாடளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்  ஊடகம் ஒன்றுக்கு கருத்துகூறியுள்ளார்.

அரசுக்கட்சியோ சிறுபான்மையினரின் வாக்குகளில் தாம் தங்கியிருக்கவில்லை என கூறியுள்ளது. அதேவேளை மைத்திரி பால சிறிசேன அவர்களின் அண்மைக்கால கூற்றுக்கள் எமக்கு எதிரான சமிக்ஞைகளையே தருகின்றன

இரண்டு வேட்பாளர்களிலும் திருப்தியில்லாத போது எவ்வாறு மக்களிடம் ஒருவருக்கு வாக்களிக்குமாறு கேட்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆயினும் கூட்டமைப்பு தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களை கோரும் என  தன்னால் கூற முடியாது என்றும் கூறினார்.

பொது எதிரணி சமஷ்டிக்கு எதிரான கருத்தினை தெரிவித்திருப்பது குறித்தும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு மைத்திரியை நிராகரிப்பதாகவும் மகிந்தவை மறைமுகமாக ஆதரிப்பதாகவும் இருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். வடக்கு கிழக்கு மக்களின் உணர்வலைகளும் பொது எதிரணி அரசு அமைந்தால்  பாதுகாப்பு  அமைச்சராக  வரக்கூடியெ சாத்தியமுள்ள சரத்பொன்சேகா, தீவிர இனவாத அரசியல் கட்சியின்  சம்பிக்க ரணவக்க இணைந்துள்ள பொது எதிரணி குறித்து எச்சரிக்கையுடன் பார்க்கும் நிலையில் இருப்பதால் மகிந்தவுக்கான ஆதரவு முன்னரைவிட அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்

கூட்டமைப்பு சரத்பொன்சேகா விடயத்தில் முன்னர் தாம் எடுத்திருந்த நிலைபாடு தோல்வியடைந்திருந்தமையால் இம்முறை அவதானமாக இருப்பதாகவும்.அவசரப்பட்டு முடிவுகளை வெளியிடாது எனினும் மகிந்த பரவாயில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதையே அவர்களின் கூற்றுக்கள் எடுத்துக்காட்டுவதாகவும் அதனை மக்களின் முடிவுக்கு விடுவதையே அவர்கள் விரும்புகின்றனர் என விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Posts