புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைஇராஜினாமாச் செய்துள்ளார்.
தற்பொழுது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான மைத்ரிபால சிறிசேன, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டு நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படமை குறிப்பிடத்தக்கது.