மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு

மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதத்தில் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான குறித்த நபரே இன்று காலை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இவர் எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts