மைத்திரிக்கு ஆதரவாக கூட்டமைப்பு மட்டக்களப்பில் பிரசாரம்

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரங்கள் மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை பகல் ஆரம்பமாகின.

இந்த விநியோக பிரசார நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், ஆர்.துரைரெட்ணம், கோ.கருணாகரம்(ஜனா), இ.நித்தியானந்தம், ஞா.கிருஷ்ணப்பிள்ளை, எம்.நடராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், பஸ்நிலையம், பொதுச் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விளக்கங்களையும் வழங்கினர்.

Related Posts