மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு

கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மயக்கமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

முல்லைத்தீவு, கோம்பாவில் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த்த் துயரச் சம்பவம் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு விக்னேஷ்வரா விளையாட்டுக்கழக வீரரான இராசேந்திரம் நிதர்சன் (வயது -25) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (02) மாலை கரப்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிதர்சன் சோர்வாகவுள்ளதாகத் தெரிவித்து மைதானத்திலிருந்து வௌியேறியுள்ளார்.

இதனையடுத்து அவர் மயக்கமுற்று சுயநினைவற்றிருந்ததால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

Related Posts