மைக்ரோ சொஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள கருத்தடை கணனி சிப்

தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படும் கருத்தடை கணினி சிப்பை அமெரிக்க மசாசுசெட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

Contraception-Computer-chip

பெண்ணொருவரின் தோலின் கீழ் பொருத்தப்படும் இந்த சிப் சிறிய அளவான லெவொனோர் ஜெஸ்ட்ரெல் ஹோர்மோனை விடுவிக்கக் கூடியதாகும்.

இந்த ஹோர்மோனை விடுவிக்கும் செயற்கிரமம் ஒவ்வொரு 16 நாட்களுக்கும் ஒரு தடவை இடம்பெறும். எனினும், இந்த செயற்கிரமத்தை தூர இருந்தும் இயக்கும் கம்பியில்லா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்நேரமும் நிறுத்த முடியும்.

மைக்ரோ சொஃப்ட் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்றதிகாரியும் உலகின் அதி செல்வந்தருமான இந்த பில்கேட்ஸின் ஆதரவைப் பெற்ற இந்த கருத்தடை சிப் எதிர்வரும் வருடம் அமெரிக்காவில் முன் கூட்டிய மருத்துவ பரிசோதனைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அது 2018 ஆம் ஆண்டளவில் பொதுமக்கள் பாவனைக்காக விற்பனைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 மில்லி மீற்றர் நீளத்தையும் 20 மில்லி மீற்றர் அகலத்தையும் 7 மில்லி மீற்றர் உயரத்தையும் கொண்டுள்ள மேற்படி உபகரணத்திலுள்ள 1.5 சென்றி மீற்றர் அளவான நுண் சிப் உபகரணத்தில் ஹோர்மோன் சிறிய அளவில் சேகரிக்கப்பட்டிருக்கும்.

சிறிய மின் சக்தியானது மேற்படி ஹோர்மோனை சுற்றியுள்ள நுண் அடைப்பை உருவாக்கி 30 மைக்ரோகிராம் அளவான ஹோர்மோனை உடலுக்குள் வெளியிடும்.

ஏற்கெனவே பானையிலுள்ள உடலுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் கருத்தடை உபகரணங்களை அகற்றுவதற்கு மருத்துவர்களின் உதவியை நாட வேண்டியுள்ள நிலையில் இந்த உபகரணத்தை தூர இருந்து இயக்கும் செயன்முறை மூலம் பயன்பாட்டாளர் சுலபமாக கட்டுப்படுத்த முடியும்.

Related Posts