மே18 நினைவு நிகழ்வுகள்

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கான கிரிகைகள்!

2009 ம் ஆண்டு மேமாதம் 18ம் திகதிமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட அனைத்து ஜீவஆண்மாக்களிற்காகவும் சாந்திகிரிகைகள் இன்று கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வடமாகாண ஐக்கியதேசியகட்சியின் அமைப்பாளர் திரு.துவாரகேஸ்வரனின் ஏற்பாட்டில் மிக அமைதியானமுறையிலே நடைபெற்றது.

இதில் வடமாகாண முதலமைச்சர் சீவி விக்கினேஸ்வரன் அவர்களும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்திசசிதரன் அவர்களும் கலந்துகொண்டு இறந்த ஆத்மாக்களின் சாந்திவேண்டி பிரார்தனையில் ஈடுபட்டார்கள்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில் ‘ 6 வருடங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட உறவுகளின் சாந்தி வேண்டி இன்று இந்த புனித சன்நிதியிலே ஒன்று சேர்ந்திருப்பது மனஆறுதலை தருகிறது என்றதொணியில் கருத்து தெரிவித்தார்.

மேலும் அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்தால் தான் அவர்களின் உறவுகளுக்கு மனஅமைதி கிடைக்கும், கடந்த ஆறு வருடகாலமாக வேதனையுற்று அலைந்து திாிந்த ஆத்மாக்களுக்கு ஒரு நிலையினை ஏற்படுத்துவாற்காக காரைநகா் மக்கள் முன்வந்து கிரிகைகளில் ஈடுபட்டமைக்கு நன்றியை தொிவித்துக்கொண்டார்.

May-18-Kirimalai

May-18-Kirimalai-2

மன்னாரில் தடை உத்தரவை மீறி உணர்ச்சிபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

மன்னாரில் அனுஸ்டிக்கப்பட இருந்த உயிர் நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்கு மன்னார் நீதிமன்றம் இன்று(18) திங்கட்கிழமை தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலும், குறித்த அஞ்சலி நிகழ்வு பிறிதொரு இடத்தில் மிகவும் எழுச்சியாக நினைவு கூரப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(18) காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் குறித்த அஞ்சலி நிகழ்வை நிறுத்த மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தினால் குறித்த அஞ்சலி நிகழ்வை மன்னார் நகர மண்டபத்தில் நடாத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த தடை உத்தரவிற்கான காரணமாக முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம் பெற்ற இறப்புக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு பொது சொத்துக்களுக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும் பங்கம் இல்லா விட்டாலும், கலவரம் அல்லது பிரச்சினைகள் ஏற்படுவதற்கு பெரும்பாலும் இடம் இருப்பதால் இந்த நிகழ்வை மன்னார் நகர மண்டபத்தில் நடாத்தாது இருப்பதற்கு என்னால் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை பிரிவு 106 இன் கீழ் இடப்படுகின்றது.

இந்த சட்டத்தை மீறினால் இலங்கை தண்டனை சட்டக்கோவை 185 ஆம் பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

குறித்த உத்தரவின் பிரதி இன்று(18) திங்கட்கிழமை காலை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மன்னார் நகர சபை மண்டப கதவில் ஒட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்த ஏற்பாட்டுக்குழுவினர் குறித்த நிகழ்வை மன்னார் நகர மண்டபத்தில் நடத்தாது உடனடியாக உப்புக்குளம் அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்ச்சிபூர்வமாக இடம்பெற்றது.

இதன் உப்புக்குளம் அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக பூசை வழிபாடு இடம் பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாட்டின் டயேஸ், முன்னாள் உள்ளராட்சி மன்ற உறுப்பினர்கள், சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், பொது மக்கள், மதத்தலைவர்கள் என பலர் பலந்து கொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இது இவ்வாறிருக்க மன்னார் நகர் பகுதியின் முக்கிய இடங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழ். பல்கலையிலும் எழுச்சியுடன் இடம்பெற்ற இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாணவர்கள் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பிரதான மண்டபம் முன்னே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கைலாசபதி கலையரங்கில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

jaffanauni_may18_013

jaffanauni_may18-1

தமிழர்இனவழிப்புநாள் – 2015 அவுஸ்திரேலிய – மெல்பேர்ண்செய்திகள்

அவுஸ்திரேலியாவின்மெல்பேர்ண்நகரில், தமிழர்இனவழிப்புநினைவுநாள்நிகழ்வுஉணர்வுபூர்வமாகநடைபெற்றுள்ளது.
ஸ்பிறிங்வேல்நகரமண்டபத்தில்திங்கட்கிழமை 18 – 05 – 2015 அன்றுமாலை 6.30 மணிக்கு, நிகழ்வுகள்ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில்பெருமளவில்மக்கள்கலந்துகொண்டு, முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த எமது உறவுகளை நினைவுகூர்ந்ததுடன், இலங்கைத்தீவில் 1948 ஆம் ஆண்டு முதல் இனப்படுகொலைசெய்யப்பட்ட அனைத்து தமிழ் உறவுகளையும், கனத்த நெஞ்சோடு நினைவேந்தல்செய்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்திரு. கரன்மயில்வாகனம் மற்றும் தமிழ் ஏதிலிகள் கழக இணைப்பாளர்திருமதி. சிறிசாமி ஆகியோரின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில், பொதுச்சுடரினைதிரு. கொற்றவன் ஏற்றிவைத்து தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியகொடியை, ஐக்கிய தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு.சதீபன் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசியகொடியை, தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. கபிலன் ஏற்றிவைத்தார்.
காலங்காலமாக தமிழர் மேல் கட்ட விழ்த்து விட்டு வரும் இனப்படுகொலையில் மரணித்த உறவுகளுக்கான நினைவுச்சுடரினை, முள்ளிவாய்க்கால் மண்ணில் தனது உறவினர்களை பறிகொடுத்த திருமதி. நிசா ஏற்றிவைத்தார்.
நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, அனைத்து மக்களும் தமது உறவுகளுக்கான மலர் வணக்கத்தை செலுத்தினர்.
வரிசையாககாத்திருந்து அனைவரும் மலர் வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து, தாயக விடுதலைப்போரிலே, மரணித்த மாவீரர்களையும் பொதுமக்களையும் குறிப்பாக, முள்ளிவாய்க்கால் மண்ணிலே ஆறுவருடங்களுக்கு முன்னர் விதையாகிப்போன, எம்முறவுகளையும் நினைவில் இருத்தியும், தமிழர்விடுதலைக்காக உலகமெங்கும் மரணித்துப்போன ஈகியர்களின் நினைவுகளை சுமந்தும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தை தொடர்ந்து திருமதி. மீனா இளங்குமரன் அவர்களின் நாட்டியாலய நடனப்பள்ளி மாணவனின், “முள்ளிவாய்க்கால் மண்ணேவணக்கம்“என்ற பாடலுக்கு வணக்க நடனம் இடம்பெற்றது.
தொடர்ந்து தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு.கோகுலன் அவர்கள், முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த அவலங்களை நினைவு கூர்ந்ததுடன், தாயக மக்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
குறிப்பாக அரசபடையினரிடம் சரணடைந்த போராளிகள் எதிர்கொண்ட கொடுமையான அவல வாழ்வையும், பெண்போராளிகளுக்கு நடைபெற்ற கொடுமைகளை கண்டு கொதித்து அந்தச் சிறையிலும் போராடிய ஒருபோராளியின் நினைவுகளையும், மனக்கண் முன்கொண்டுவந்தார்.

அதனைத்தொடர்ந்து, அண்மையில் வெளியான சன்னத்தின் சுவடுகள் என்ற முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த கவிதைப்புத்தகத்தை படைத்து, சிட்னியில் வெளியிட்டு வைத்த நூலின் ஆசிரியர் நிஜத்தடன் நிலவனின் படைப்பில், நாட்டிய நடனம் இடம்பெற்றது..

இந் நாட்டிய நடனம் முள்ளிவாய்க்கால் மண்ணில் காவு கொள்ளப்பட்ட மனித ஆத்மாவின்கதையை எடுத்தியம்புவதாக அமைந்திருந்தது. இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கலுடன்,இரவு 8.00 மணியளவில் நிகழ்வு நிறைவடைந்தது.

குறிப்பு – நிகழ்வின் இறுதியில் சிறிலங்கா அரசின் கொடிய இன அடக்கு முறையை நியாயப்படுத்தும் நோக்கோடு,சிறிலங்கா கொடியை மேடைக்கு அருகில் கொண்டு வந்து, குழப்பத்தை ஏற்படுத்த ஒரு பெண்மணி முயன்றார்.

குறித்த பெண்மணி தமிழ் மக்களிற்கு நடந்த இனப்படுகொலைகள் பற்றி, அதிககரிசனை கொண்டுள்ளதாகவும், தமிழ்மக்களுக்கு அது பற்றி உரையாற்ற விரும்புவதாகவும், ஏற்பாட்டாளர்களை கேட்டிருந்தார்.
எனினும் கபடத்தனமான நோக்கோடு வருகைதந்த, இப் பெண்மணியின் செயற்பாட்டை நிகழ்விற்கு வருகைதந்திருந்த, ஏனைய சமூக செயற்பாட்டாளர்களும் கோபத்துடன் எதிர்கொண்டனர்.
சிறிலங்கா அரச இயந்திரத்தின் தூண்டுதலின் பேரில், இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் நோக்கோடு, காவல்துறையினர் ஏற்கனவே வருகை தந்திருந்ததால், நிகழ்வை அமைதியான முறையில், நிறைவு செய்யக்கூடியதாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MAY18 (2)

MAY18 (4)

may-18-2015-1

தொடர்புடைய செய்திகள்

 

உண்மைகளை சர்வதேசத்துக்கு கொண்டு வரவே தமிழர்கள் நீதியை கோருகின்றனர்

உறவுகளை அஞ்சலிக்கக் கூடிய மக்களின் கண்ணீரால் தோய்ந்தது முள்ளிவாய்க்கால்!

சென்னை மெரீனாவில் ஏராளமானோர் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

Related Posts