“மே 18 புனிதமான பிரதிபலிப்பு நாள்” சங்காவின் உருக்கமான டுவிட்

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் வரும் நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் தெரிவித்த கருத்தானது தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“மே 18 புனிதமான பிரதிபலிப்புக்கு ஒரு நாள், யுத்தத்தில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்கு. எங்கள் உள்ளத்தின் தீர்ப்புகளை சற்று விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களின் வலியை இதயம் திறந்து உணர்ந்து கொள்வதற்கான நாள்.

ஒருவருக் கொருவர் திறந்த மனப்பாங்குடன் இருக்க வேண்டும் அப்போதுதான் வரலாற்றில் இது திரும்பவும் நடக்காது” என முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேற்று முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், தென் இலங்கையில் பல்வேறு இடங்களில் விடுதலை புலிகளுக்கு நினைவது தினம் நடப்பதாக எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் உருவாகியிருந்தது.

இந்நிலையில் குமார் சங்கக்காராவின் குறித்த கருத்தானது இனவாதம் பேசும் அனைத்து தரப்பினருக்கும் ஒரு படமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts