மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கா­லில், தமிழினம் ஓரணியில் திரள வேண்டும்!!

முள்­ளி­வாய்­க்கால் என்­பது இறு­திப் போரில் பெருந்­தொ­கை­யான தமிழ் உற­வு­கள் அரச படை­க­ளின் கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­க­ளில் ஈவி­ரக்­க­மின்றிக் கொல்­லப்­பட்ட மண். தமிழ் உற­வு­கள் பலர் காணா­மல் ஆக்­கப்­பட்ட மண். தமி­ழி­னத்­தின் விடு­த­லைக்­காக எமது உற­வு­கள் தீக்­கு­ளித்த மண். விடு­த­லைக் கன­வு­டன் ஆயி­ர­மா­யி­ரம் வேங்­கை­க­ளும் தமிழ் மக்­க­ளும் தங்­க­ளின் உயிர்களை ஆகு­தி­யாக்­கிய மண்.

மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கா­லில் தமி­ழி­னம் ஓர­ணி­யில் திர­ள­வேண்­டும். முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்­தில் வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் நடை­பெ­ற­வுள்ள நினை­வேந்­தல் நிகழ்­வில் தமிழ் மக்­கள், பொது அமைப்­பு­கள், அர­சி­யல் கட்­சி­கள் என்று அனைத்­துத் தரப்­பும் ஒற்­று­மை­யு­டன் ஒன்று திரண்டு உயிர்­நீத்த எமது உற­வு­களை சுடர் ஏற்றி – அஞ்­சலி செலுத்தி நினைவுகூரவேண்டும் என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் கோரியுள்ளார்.

ஈழத் தமி­ழர் வாழ்­நா­ளில் கறுப்பு நாளான – செங்­கு­ருதி தோய்ந்த மிகப்­பெ­ரிய துயர்­ப­டிந்த நாளான – மாபெ­ரும் மனி­தப் படு­கொலை நடந்த நாளான மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்­தில் நினை­வேந்­தல் நிகழ்வை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆளு­கைக்­குட்­பட்ட வடக்கு மாகாண சபை நடத்­த­வுள்­ளது. இந்த நிலை­யி­லேயே, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இறு­திப் போரில் அரச படை­க­ளின் பல­வி­த­மான தாக்­கு­தல்­க­ளி­னால் எமது உற­வு­கள் பலர் சாக­டிக்­கப்­பட்­ட­னர். சாட்­சி­யங்­கள் எது­வு­மின்றி பன்­னாட்டு போர்­வி­தி­க­ளுக்கு முர­ணாக இறு­திப் போர் நடை­பெற்­றது.

மகிந்த ஆட்­சி­யில் தமி­ழர்­கள் மீது நடத்­தப்­பட்ட இந்­தத் திட்­ட­மிட்ட கொடூ­ரத் தாக்­கு­தல்­கள் தொடர்­பில் அப்­போது நான் நாடா­ளு­மன்­றில் பல உரை­களை ஆற்­றி­யி­ருந்­தேன். போரை உடன் நிறுத்தும்படி ஆட்­சி­யில் இருந்த அர­சைக் கேட்­டி­ருந்­தேன். ஆனால், தமிழ் மக்­க­ளுக்­குப் பெரிய இழப்­பு­க­ளைக் கொடுத்­துத்­தான் அரசு போரை முடி­வுக்­குக் கொண்டு வந்­தது.

இத­னால் பெருந்­தொ­கை­யான தமிழ் மக்­கள் கொல்­லப்­பட்­ட­னர் பலர் காணா­மற் ஆக்­கப்­பட்­ட­னர். எமது மக்­க­ளின் சொந்த வீடு­கள், சொத்­து­கள் அழிக்­கப்­பட்­டன. பாதிக்­கப்­பட்ட எமது மக்­க­ளுக்கு நீதி­யைப் பெற்­றுத்­த­ரு­மாறு பன்­னாட்­டுச் சமூ­கத்தை இன்று நாம் கோரி நிற்­கின்­றோம். தமி­ழின அழிப்பு தின­மா­க­வும், தமிழ்த் தேசிய துக்க நாளா­க­வும் மே 18ஆம் திகதி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் எதிர்­வ­ரும் 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்­தில் நடை­பெ­ற­வுள்ள நினை­வேந்­தல் நிகழ்­வில் தமிழ் மக்­கள், பொது அமைப்­பு­கள், அர­சி­யல் கட்­சி­கள் என்று அனைத்­துத் தரப்­பும் ஒற்­று­மை­யு­டன் ஓர­ணி­யில் திரண்டு பங்­கேற்க வேண்­டும். இறு­திப் போரில் இழந்த எமது உற­வு­களை சுடர் ஏற்றி அஞ்­சலி செலுத்தி நினை­வு­கூர வேண்­டும். இவ்­வாறு நாம் செய்­வ­தன் ஊடாக போரின்­போது உயி­ரி­ழந்த எமது உற­வு­க­ளின் ஆத்மா சாந்­தி­ய­டை­யும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts