மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 409 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
உலகக் கிண்ணத் தொடரின் 19வது போட்டியாக பி பிரிவிலுள்ள தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் குயின்டன் டி காக் (12) ஏமாற்றமளித்த போதும், காசிம் அம்லா 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த கையோடு ஆட்டமிழந்தார்.
பின்னர் டு பிளசி 62 ஓட்டங்களையும், ரில்லி ரொஷோவ் 61 ஓட்டங்களையும் (39 பந்துகள், 6 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசிய நிலையில் வௌியேற, அணித் தலைவர் டிவிலியர்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சாளர்களை சரமாரியாக பதம் பார்த்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்த அவர், 66 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு, 17 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் அடங்களாக 162 ஓட்டங்களை குவித்தார். டீ வில்லியர்ஸ் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் வேகமான 150 ஓட்டங்களைப் பெற்றார் – 64 பந்துகள்.
இது உலகக்கிண்ணப் போட்டிகளில் இரண்டாவது வேகமான சதம். – 52 பந்துகள்.
இதன்படி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த அந்த அணி 408 ஓட்டங்களை விளாசியுள்ளது.
விஷேடமாக கடைசி 10 ஓவர்களில் மட்டும் மேற்கிந்திய தீவுகள் அணியால் 150 ஓட்டங்கள் வாறி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
409 என்ற வெற்றி இலக்கை நோக்குி துடுப்பாடும் மேற்கிந்திய தீவுகள் 12 ஒட்டங்களுக்கு 1 விக்கெட்டினை இழந்துள்ளது கடந்த முறை இரட்டை சதம் பெற்ற கெயில் இம்முறை 3 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.