மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் இருவர் நேற்று (07) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாணசபை முதலமைச்சாராக இசுரு தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் முன்னிலையில் மேல்மாகாண ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அதேவேளை வடமேல் மாகாண முதலமைச்சராக தர்மசிறி தஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.