மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஹேமா குமுதினி விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபயக்கோன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.