மேலும் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை வெளியிடுவேன்: சுசித்ரா

கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசித்ரா எதுவும் வாய் திறக்காத நிலையில், அவரது கணவர் கார்த்திக், சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை யாரோ சிலர் முடக்கிவிட்டதாகவும், அவர்கள்தான் தகாத பதிவுகளை வெளியிட்டதாகவும், தற்போது சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்றுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

சர்ச்சை கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக அவரே கூறியிருந்த வேளையில், அவரது டுவிட்டர் தளத்தில் தனுஷ்-திரிஷா, அனிருத்-ஆண்ட்ரியா, டிடி, ஹன்சிகா உள்ளிட்டவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை மீண்டும் கிளப்பியது. அந்த புகைப்படங்களை பதிவு செய்த சிலமணி நேரங்களிலேயே சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து அந்த புகைப்படங்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிட்டது.

மேலும் பல தகவல்களும் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. கோலிவுட் சினிமா கூவம் ஆற்றைப் போல நாறுகிறது. தனுஷ், அனிருத், சின்மயிடம் எனது பகிர்வை நீங்கள் மறுக்க முடியுமா உள்ளிட்ட பல கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இன்னும் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்களை விரைவில் வெளியிட உள்ளதாகவும் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ராணா-த்ரிஷா, பாடகி சின்மயி-அனிருத், இயக்குநர் ஷங்கர்-அனுயா, தனுஷ்-அமலா பால், தனுஷ்-பார்வதி நாயர் மற்றும் ஆன்ட்ரியா-செல்வா ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த பகிர்வில் கூறப்பட்டுள்ளது. இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த பதிவுகள் அனைத்தையும் சுசித்ராதான் பதிவு செய்தாரா? அல்லது மர்ம நபர்கள் அவரது கணக்கை ஹேக் செய்து வெளியிடுகிறார்களா என்ற கேள்வி அனைவரது மனதிலும் ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு சுசித்ரா நேரில் பதில் சொன்னால் தான் முடிவு வரும் என்று கோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கிறது. தொடர்ந்து மவுனமாக இருக்கும் சுசித்ரா இதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Posts