மேலும் இரு பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி ரஸ்நாயக்கபுர மற்றும் கொபேகன ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஊரடங்குச் சட்டமானது நாளை அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே உடனுக்கு அமுலாகும் வரையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.